கேமரூன் நாட்டில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் உள்பட 79 பேரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு மணல் சிற்பம் வரைந்து தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் மத்திய வங்கி ஊழல் மோசடியுடன் தொடர்புபட்ட எவரையும் எம்முடன் இணைத்துக்கொள்ளப்போவதில்லை. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவும் இதுதொடர்பாக வாக்குமூலம் அளிக்கவேண்டிவரும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்துள்ளார். அலைனா டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக பாராளுமன்றத்தினை கூட்டவேண்டியதன் அவசியத்தை சபாநாயகரிடம் வலியுறுத்தினேன் என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயக…
பாராளுமன்ற கூட்டத்தொடரை பிற்போடும் வகையில் ஜனாதிபதி பிறப்பித்த கட்டளை அடங்கிய அதி விசேட வர்த்தமானியை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியாது என சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார்.