தென்னவள்

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

Posted by - November 10, 2025
கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபால பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கையளித்தார். அரசியலமைப்பின் 154வது யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக ஆசிரியர்கள் டிசம்பரில் ஒரு நாள் போராட்டம் – ஜோசப் ஸ்டாலின்

Posted by - November 10, 2025
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ஒரு நாள் அடையாள போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும்

ஐ.தே.கவின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச் செயலாளராக ஹரின் பதவியேற்பு

Posted by - November 10, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதவியேற்றுள்ளார். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வில், கட்சியின் சிரேஷ்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
மேலும்

புத்தல – மொனராகலை பிரதான வீதியில் விபத்து ; நால்வர் காயம்!

Posted by - November 10, 2025
புத்தல – மொனராகலை பிரதான வீதியில் 11 ஆவது மைல்கல் பகுதியில் இன்று திங்கட்கிழமை (10)  பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

கஞ்சா வியாபாரி கைது!

Posted by - November 10, 2025
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் 110 கிராம் கேரள கஞ்சாவுடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் இன்று திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை ; மருந்தக உரிமையாளர் கைது!

Posted by - November 10, 2025
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மருந்தக உரிமையாளர் ஒருவர் சீதுவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

இலங்கை – சவூதி அரேபியாவுக்கு இடையேயான ஹஜ் ஒப்பந்தம் கைசாத்து

Posted by - November 10, 2025
சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் 2026 ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (9) கைசாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது இலங்கை மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி  அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர்…
மேலும்

11 இந்திய மீனவர்கள் கைது!

Posted by - November 10, 2025
இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை (09) இரவு அனலைதீவுக்கு அருகே இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் மீன்பிடி படகுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

நுவரெலியாவில் வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - November 10, 2025
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உருளைக்கிழங்கு வகைகளை முழுமையாக நிறுத்துமாறு வலியுறுத்தியும், விலை வீழ்ச்சியை எதிர்த்தும் நுவரெலியாவில் தேங்காய்களை அடித்துடைத்து, அரசுக்கு எதிராக நுவரெலியா விசேட பொருளாதார நிலையத்தினை மூடி திங்கட்கிழமை (10) போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும்