அனுராதபுரம், ஹொரவபொதான பகுதியில் பிக்கு மாணவர்கள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் “உட்டியா” சமிந்தா கலபோடா என்ற அழைக்கப்படும் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளை முதல் நாளாந்தம் காலை ஐந்து மணி முதல் காலை 9 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணியும் வரையான காலப்பகுதியினுள் வவுனியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
திருகோணமலை-புல்மோட்டை கடற்பரப்பில் 4 மீனவர்களை தாக்கியதுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினர் 12 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த போது அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே நாம் இன்னமும் பயன்படுத்தி வருகின்றோம்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாம் குறிப்பிடத்தக்களவு முக்கித்துவத்தைப் பெற்றுவிட்டோம். தற்போது அதனைப் பாதுகாத்துக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும்.