ஒரு நாடு, இரு நிர்வாகம்’ என்ற அடிப்படையில் ஹாங்காங் ஆட்சி நிர்வாகம் நடைபெறுகிறது. இதன்படி சீனாவின் கட்டுப் பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் பகுதிக்கு தனியாக அரசமைப்புச் சட்டம் உள்ளது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் மாற்றமில்லை. பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி. பாப் பிளாக்மேன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வரும் 22-ம் தேதி இந்தியர்கள் சார்பில் நடக்கும் ஹவ்டி, மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொன்ல்ட் ட்ரம்பும் பங்கேற்கிறார் என்பதை வெள்ளை மாளிகை உறுதிசெய்துள்ளது.
ஒற்றை ஆட்சிக்குள் அதியுச்ச அதிகார பகிர்வு என்ற நோக்கத்தில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமே தவிர சமஷ்டி கோரிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த சஜித் பிரேமதாச தயாரில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் அணி உறுப்பினரும் அமைச்சரவை…
ஐக்கிய தேசிய முன்னணிக்குள் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச, கட்சிக்குள் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்றும் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வினை வழங்கப்போகின்றார் என்பதே எமக்கு முக்கியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பலாலி விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் நிர்மாணப்பணிகள் நூற்றுக்கு 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும், அதே போன்று விமாநிலையம் மற்றும் விமான சேவைகள் வழங்கும் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும்…