ஆர்.பீ.கே பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா பகுதியில் உள்ள 10 தோட்டங்களை சேர்ந்த 231 உத்தியோகஸ்தர்கள் கடந்த 8 தினங்களாக பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று 9 வது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.
அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா…
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பண்டிகை காலம் ஆரம்பித்துள்ளதால் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன , மக்களின் பாதுகாப்பை தடையின்றி உறுதிப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் தயாராகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.