புயலால் பாதிக்கப்பட்ட கரீபியன் தீவு நாடான ஜமைக்காவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தந்தை, மகள் இருவரும் சிறிய ரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில், விமானம் விபத்துக்குள்ளாகி இருவரும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி திடீரென இடிந்து ஆற்றில் விழுந்த காட்சி பதிவு செய்யப்பட்ட காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் கடன்பட்டுள்ளார்கள். நாட்டுக்கு அதிகளான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மலையக மக்கள் தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை இதுவரை காலமும் பெறவில்லை.பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பில் 200 ரூபா அரசாங்கம் வழங்குவது தவறு என்ற…
தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், நேற்று (12) நடைபெற்ற சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர்.
தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதன் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர் மட்டக் கூட்டம் ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
உலகில் உள்ள சகல பிரச்சினைகளையும் பற்றி பேசிய ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு பற்றி வரவு- செலவுத் திட்ட உரையில் ஏதும் சொல்லவில்லை. இந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாது, புதிய அரசியலமைப்பையும் உருவாக்காது. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையின் அதிகார மோகத்துக்கு…