கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், ‘நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா…
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனைகளின் போது ஐந்து பேர் வெவ்வேறு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இணைப்புச் செயலாளராக இல்லாவிடின் ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்ட நபராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் மோசடிகளில் ஈடுப்படும் நபர்கள் குறித்து தகவல்கள் கிடைத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.