கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ்ப்பாணம், கண்டி மற்றும் பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நிலை காரணமாக உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொவிட் – 19 நெருக்கடியின் பரிமாணம் குறைவடைந்து கொண்டுவரும் நிலையில், சீன அரசாங்கம் அந்தத் தொற்றுநோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கும் ஏனைய நாடுகளின் தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அதன் கவனத்தை இப்போது திருப்பியிருக்கிறது.
கொரோ வைரஸ் தொற்று தொடர்பில் சமூகவலைத்தளத்தின் ஊடாக போலிப் பிரச்சாரம் வழங்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குருணாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு குற்றப் புலனாய்வு பிரிவினரின் சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிப்பதால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நாடு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறு குற்றங்கள் மற்றும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாத நிலையில் சிறைச்சாலைகளில் இருக்கும் சுமார் 1460 கைதிகளை விடுதலை செய்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நியுயோர்க்கின் மருத்துவர் காமினி டுபேயிற்கு நகரத்தின் நோயாளிகளிற்கு சிகிச்சை அளிக்கும் போது அவரிற்கு மரணம் தனது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பது தெரிந்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த குடும்பமொன்று, நேற்றைய தினம் (28) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தளம்- கடையங்குளம் பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 100 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, புத்தளம் மாவட்டச் செயலாளர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளமையால், பொதுமக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, யாழ்.மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.