கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களில் இன்று (18) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து சற்று முன்னர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இனவழிப்பு செய்யப்பட்ட எங்களுடைய உறவுகளை நினைவு கூறுவதற்கு இனவழிப்பு உச்சம் பெற்ற மே மாதத்தின் இவ் வாரம் இனஅழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவுகூறுவதற்குரிய வாரமாக பிரகடனப்படுத்தி நினைவேந்தல்களை மேற்கொண்டு வருவது தமிழனத்தின் கடந்த கால வரலாறு.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர்…
எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சவால் நிறைந்ததாக காணப்படும் என்பதால், அதற்காக முறையான திட்டங்களை வகுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி, நாளை (18) இரவு 07 மணிக்கு கோவில்கள், தேவாலயங்களில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் மணிகளை ஒலிக்கச் செய்து, அஞ்சலி செலுத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியுடன் இன்று (17) இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.