தென்னவள்

ஒட்டுச்சுட்டான் இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் ஆராய இரு விசேட பொலிஸ் குழுக்கள்

Posted by - August 18, 2025
ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் இரு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாய்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
மேலும்

எரிபொருள் வவுச்சர் மோசடி : காத்தான்குடி பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

Posted by - August 18, 2025
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபா அரச பணத்தை மோசடி செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகன சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சனிக்கிழமை (16)…
மேலும்

இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்

Posted by - August 18, 2025
முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் திங்கட்கிழமை (17) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
மேலும்

தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்

Posted by - August 18, 2025
இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய  அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி ராணுவ  பிரசன்னத்திற்கு  எதிரான போராட்டத் திற்கான  முடிவை எடுத்திருக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.எனினும் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ…
மேலும்

தொழில்நுட்ப காரணிகளை குறிப்பிட்டு பிரேரணையை பிற்போடகூடாது

Posted by - August 18, 2025
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவங்களுடன் கிழக்கு மாகாண முன்னாள் கட்டளைத் தளபதியான தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர சம்பந்தப்பட்டுள்ளார் என்று குற்றச்சாட்டப்படுகிறது. ஆகவே நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு நம்பிக்கையில்லா பிரேரணையை…
மேலும்

ஒட்டுச்சுட்டான் விவகாரத்தில் இனப் பிரச்சினையை திணிக்க வேண்டாம்

Posted by - August 18, 2025
ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் இளைஞரது மரணத்துக்கும் மக்களின் காணிகள் அபகறிக்கப்படுவதாகக் கூறப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த சம்பவத்துக்குள் தமிழ், முஸ்லிம், சிங்களம் என இனப் பிரச்சினையை திணிக்க வேண்டாம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு,…
மேலும்

மன்னாரில் 15 வது நாளாக தொடரும் போராட்டம்

Posted by - August 17, 2025
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  (17) 15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும்

செம்மணி – துண்டி முகாம் வரை கைதாகி சித்திரவதைகளில் உயிரிழந்தோர் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டனர்

Posted by - August 17, 2025
அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக,  செம்மணிக்கு அப்பால் பல முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறேன் என நான் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் வாக்குறுதியளிக்கிறேன் என்று அறிவித்துள்ள கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட…
மேலும்

இலங்கையில் மாறாத கட்டமைப்பு மீறல்கள்: பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அவசியத்தை உணர்த்துகிறது

Posted by - August 17, 2025
இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கட்டமைப்பு ரீதியான காரணிகள் இன்றும் தொடர்வதை ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். இந்த…
மேலும்

இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை

Posted by - August 17, 2025
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாதக்கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாத்தடைச்சட்டத்தை நீக்குதல், மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன.
மேலும்