இருக்கின்ற மாகாணசபை அதிகாரங்களைத் தூக்கி எறிந்து விட்டு, அதனை முழுமையாக இல்லாமல் செய்து விட்டு எமது தீர்வு தொடர்பிலான எதிர்கால அரசியலை முன்னெடுக்க முடியாது. இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தலைவர்களாக…
அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள் என வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவியோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட…
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுமா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சுகாதார பிரிவின் பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு – மாமாங்கம் 3ஆம் குறுக்கு வீதியில் இன்று அதிகாலை வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.குறித்த வர்த்தக நிலையம் எரிவாயுக் கசிவு காரணமாக தீப் பற்றி உள்ளதாக முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பல உயர் கல்வி பாடநெறிகள் மற்றும் விசேட பட்டப்படிப்புகள் முழுமையாக தற்காலத்தில் ஆங்கிலத்தில் மாத்திரமே இருப்பது இலங்கையின் உரிமையையும் நாட்டின் அடையாளத்தை பாதுகாக்கும் தேசிய மொழிகளுக்கும் அச்சுறுத்தல் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி என்ற போர்வையில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய டொலர் கொள்ளையின் பிரதிபலனையே நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இந்த பாவத்தை மென்மேலும் சுமக்காமல்…