தென்னவள்

போரினால் பாதிக்கப்பட்ட வன்னிக்கு அமைச்சர்கள், தூதுவர்கள் வரவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - November 23, 2025
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அமைச்சர்கள் ,வெளிநாடுகளின் தூதுவர்கள் வன்னிக்கு வருவதற்கு தயங்குகிறார்கள். அமைச்சர்கள், தூதுவர்கள்  வன்னிக்கு வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களையும் கவனத்தில் எடுக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி…
மேலும்

மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை!

Posted by - November 23, 2025
அரசியலமைப்பின்  13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய  மோதலுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாகாண  சபைகளுக்காக அதிகார வழங்கலை தொடர்ந்து புறக்கணித்து மத்திய அரசாங்கம் சிறந்தது  என்ற நிலைப்பாட்டை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண…
மேலும்

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

Posted by - November 23, 2025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இந்தியாவில், தமிழ்நாடு, திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை  வீதியில் அமைந்துள்ள ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்

இலங்கை வருவதற்கான விமான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து பின்னர் இரத்து செய்துள்ள பஷில்

Posted by - November 23, 2025
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் எனக் கூறும் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்த போதிலும், இலங்கை வருவதற்கான விமான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து பின்னர் இரத்து செய்துள்ளதாக மாத்தறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை (21) அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இனவழிப்பு நிகழவில்லை எனச் சித்தரிக்க விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள் !- பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன்

Posted by - November 23, 2025
இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர்…
மேலும்

யாழில் போதை மாத்திரைகளுடன் 4 சந்தேகநபர்கள் கைது!

Posted by - November 23, 2025
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது!

Posted by - November 23, 2025
லுனுகம்வெஹெர – நுகேவெவ பகுதியில் சுமார் ¼ ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட 5,363 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

Posted by - November 23, 2025
2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ப்ளு எக்கோனமிக் எனப்படுகின்ற நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர்…
மேலும்

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம்….பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து கலந்துரையாடல்!

Posted by - November 23, 2025
அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால…
மேலும்