தென்னவள்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரையுங்கள்

Posted by - September 3, 2025
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு…
மேலும்

இராணுவத்தினருக்கான தார்மீக பொறுப்பு குறித்து சாகர காரியவசம் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்

Posted by - September 3, 2025
யுத்தம் முடிவடைந்தாலும் பயங்கரவாதத்தக்குரிய பிரிவினைவாதம் இன்றும் இல்லாதொழியவில்லை என்பதை புரிந்துக்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல.இராணுவத்தினரை பலிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்து, நாட்டுக்காக சேவையாற்றிய இராணுவத்தினருக்காக முன்னிலையாகும் தார்மீக பொறுப்பு வரலாற்றினால் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்பை…
மேலும்

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; துப்பாக்கியை மறைத்து வைக்கும் காணொளி

Posted by - September 3, 2025
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி சட்ட புத்தகத்திற்குள் மறைத்து வைப்பதைக்  காட்டும் காணொளி கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க தீர்மானம்

Posted by - September 3, 2025
ஆறாம் திகதி இடம்பெற இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒத்தி வைப்பதற்கு கட்சியின் முகாமைத்துவ குழு தீர்மானித்துள்ளது.
மேலும்

இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

Posted by - September 3, 2025
மீட்டியாகொட மற்றும் பண்டாரகம பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மத்திய அதிவேக வீதியில் விபத்து ; இருவர் உயிரிழப்பு

Posted by - September 3, 2025
மத்திய அதிவேக வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இரவு இடம் பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. லொறி ஒன்று எரிபொருள் கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

159 ஆவது பொலிஸ் தினம் இன்று

Posted by - September 3, 2025
ஒன்றரை நூற்றாண்டுக்கும் அதிகமான ஒரு நீண்ட வரலாற்றுக்கு உரிமையுடைய இலங்கை பொலிஸ்  இன்று  03 ஆம் திகதியன்று தனது 159 ஆவது  பொலிஸ் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றது.
மேலும்

வடக்கில் நினைவேந்தலுக்கு அனுமதியளித்துவிட்டு இராணுவத்தினரை அரசாங்கம் வேட்டையாடுகிறது – நாமல்

Posted by - September 3, 2025
வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் நிலைமை இராணுவ அதிகாரிகளுக்கும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்காலத்தில் ஏற்படலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற…
மேலும்

கரூர் வாக்காளர் பட்டியல் விவகாரம்: தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Posted by - September 2, 2025
கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மண்ணியாகுளத்தில் பற்றியெரிந்த பனங்கூடல்: முறைப்பாடளித்தும் கண்டு கொள்ளாத பொலிஸார்

Posted by - September 2, 2025
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட   வன்னேரிக்குளம் கிராமத்தின் மண்ணியாகுளம் குடியேற்றப் பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் அத்துமீறி நுழைந்தவர்கள் அங்கிருந்த பனைமரங்களுக்கு தீ வைத்து எரித்து அழித்துள்ளனர்.
மேலும்