எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில், பிற மாகாண பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவை மாகாண கல்வி ஆணையம் உறுதி செய்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட Nord Stream என்னும் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியதாக உக்ரைன் நாட்டவர் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.
பிரான்ஸ்-ஜேர்மனி இடையே ODIN’S EYE ஏவுகணை எச்சரிக்கை அமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2025 அக்டோபர் 15-ஆம் திகதி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர்கள், “ODIN’S EYE” எனப்படும் விண்வெளி அடிப்படையிலான ஏவுகணை எச்சரிக்கை அமைப்பை இணைந்து செயல்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) விசாரணையின் போது குற்றத்திற்குப் பிறகு தனது நடவடிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
“இணைந்திருங்கள். நலமாக இருங்கள்” என்ற தேசிய திட்டம் தொடங்கப்படுகிறது. இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி எதிர்கால சுகாதார சவால்களை சமாளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
ரி -56 ரக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.