தென்னவள்

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சாரதி உயிரிழப்பு!

Posted by - October 21, 2025
வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

முதலை இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு!

Posted by - October 21, 2025
அம்பாந்தோட்டை, ஹுங்கம, கலமெட்டிய கடற்கரை பகுதியில் முதலை இழுத்துச் சென்ற மீனவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை – வைத்தியசாலைக்கு முன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Posted by - October 21, 2025
இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியசாலையில் கடமையாற்றிய…
மேலும்

COPE, COPA குழுக்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் குழு அனுமதி

Posted by - October 20, 2025
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA) அறிக்கைகளை பொலிஸ் மாஅதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு அனுமதி அளித்துள்ளது.
மேலும்

நவம்பர் 1 முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் பைகள், கொள்கலன்களுக்கும் பணம் செலுத்தவேண்டும்!

Posted by - October 20, 2025
பொருட்களை கொள்வனவு செய்யும் நாட்டின் அனைத்து வாடிக்கையாளர்களும் நவம்பர் 1ஆம் திகதி முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கொள்கலன்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
மேலும்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காட்டுயானை தாக்கியதில் பெண் பலி!

Posted by - October 20, 2025
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும்

கொட்டும் மழையில் முத்துநகர் விவசாயிகள் தொடர் போராட்டம்

Posted by - October 20, 2025
தொடராக ஓய்வின்றி, கொட்டும் மழையில் 34ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களை தனியார் தமிழ் செய்திப் பிரிவு ஊடகமொன்றிற்கு, பிரதமர் அலுவலக செயலாளர் தெரிவித்த மாற்றுக் கருத்து பெரும் கவலையளிக்கிறது என முத்துநகர் ஒன்றிணைந்த விவசாய சம்மேளன செயலாளர்…
மேலும்

கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது!

Posted by - October 20, 2025
அம்பாந்தோட்டையில் கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

“கெஹெல்பத்தர பத்மே” எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் – இஷாரா செவ்வந்தி

Posted by - October 20, 2025
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்!

Posted by - October 20, 2025
கொழும்பு – புதுக்கடை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட, பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் தயாரத்ன இன்று திங்கட்கிழமை (20) உத்தரவிட்டுள்ளார்.
மேலும்