தென்னவள்

நவம்பரில் டில்லி செல்கின்றார் சஜித்

Posted by - October 26, 2025
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் நவம்பரில் டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

பத்தேகம பிரதேசபையின் உப தலைவர் மீது தாக்குதல்

Posted by - October 26, 2025
பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே  தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு நாளை ; ஜனாதிபதி, நீதியமைச்சரிடம் மகஜர்களும் கையளிக்கப்படும்

Posted by - October 26, 2025
1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (27)  சீதுவ – ரத்தொலுகமவில் நடைபெறவிருப்பதுடன் அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரிடம் மகஜர்களும்…
மேலும்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - October 26, 2025
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு  இடையேயான படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் படகு சேவைகள்  மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழன்று ஆரம்பம்

Posted by - October 26, 2025
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
மேலும்

எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது

Posted by - October 26, 2025
மாகாணத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தபடப் வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணய விடயத்தினைக் காண்பித்து இழுத்தடிப்பு செய்யக்கூடாதென ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகபேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
மேலும்

யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து

Posted by - October 26, 2025
புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
மேலும்

கிழக்கில் வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் – கல்முனை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - October 26, 2025
கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்திற்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மேலும்

தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் மீற்றர் வட்டி

Posted by - October 26, 2025
வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப்பொருள் மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிஸாருக்கோ வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு ஆறு பேர் போட்டி

Posted by - October 26, 2025
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
மேலும்