தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3 இடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன் சோதனை பணிகள் நவ.1 முதல் தொடங்கி பல வகைப்பாடுகளில் அம்மாதம் இறுதிவரை நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமதுஅலி என்பவர் பூ ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிலக்கோட்டையில் இருந்து பூக்களை வாங்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
ஜேர்மனியில், குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரின் வழக்கை பொலிசார் ஒருவர் பின் தொடராமல் விட்டதால், அந்தக் குற்றவாளி மீண்டும் ஒரு பயங்கர குற்றச்செயலில் ஈடுபட்டார். அந்த குற்றவாளியை சரியாக கண்காணிக்காத பொலிசாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் பாலியல் வன்முறைக்கு எதிராக முக்கியமான சட்ட திருத்தம் ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது. ஜிசெல் பெலிகோட் (Gisele Pelicot) என்ற பெண்ணின் வழக்கைத் தொடர்ந்து, “ஒப்புதல் இல்லாத எந்தவொரு பாலியல் செயலும் பாலியல் வன்முறை” என சட்டத்தில் வரையறை செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின்…
இந்தியாவின், உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச்சில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – 15, காக்கைதீவு கடற்கரையில் களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பைகள் அன்றாடம் கரையொதுங்குவது கடற்கரை பிரதேசத்தின் புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் காணப்படுவதாக தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிதம்பரப்பிள்ளை மனோகரன்,…
அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான வெளிப்பணிகளை மேற்கொள்ளும் அவுட்சோர்ஸிங் சேவை வழங்குநரான IVS லங்கா நிறுவனம் நாளை ஒக்டோபர் 31ஆம் திகதி வரை மட்டுமே செயற்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.