நிலையவள்

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை புதிய அரசியலமைப்பின் மூலமே பெறலாம்-இரா.சம்பந்தன்(படங்கள்)

Posted by - November 8, 2016
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயநாடுகளின் பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலேயை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சந்தித்த…
மேலும்

கிளிநொச்சி மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சி(காணொளி)

Posted by - November 8, 2016
கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சிக்கோட்டப்பாடசாலைகளில் உயர்தரக்கல்வியை கற்றுவரும் மாணவர்களுக்கான பால்நிலை சமத்துவம் போதைப்பொருள் கட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான ஒரு நாள் தலைமைத்துவ கருத்தரங்கு நேற்று பிற்பகல்…
மேலும்

யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார தொழிலாளர்களினால் நிரந்தர நியமனம் வழங்ககோரி ஆர்பாட்டம்(காணொளி)

Posted by - November 8, 2016
யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார தொழிலாளர்களினால் நிரந்தர நியமனம் வழங்ககோரி, யாழ்ப்பாண மாநகரசபைக்கு முன்னால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. வடபிராந்திய ஜக்கிய தொழிலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்.மாநகர சபையில் பணியாற்றும்; 127 தற்காலிக சுகாதார தொழிலாளர்களினாலேயே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கடந்த…
மேலும்

இலங்கை பெண் சவூதி அரேபியாவில் உயிரிழப்பு (காணொளி)

Posted by - November 8, 2016
ஹட்டன் – மஸ்கெலியா – சூரியகந்த பகுதியைச் சேர்ந்த பெண் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹட்டன் – மஸ்கெலியா – சூரியகந்த பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரன் இன்று…
மேலும்

ஆவாக்குழு தொடர்பில் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கள் மற்றும் களவகளில் ஈடுபடுகின்ற ஆவா குழுக்கள் என்று சொல்லப்படுகின்ற குழுக்கள் தொடர்பான உண்மை நிலையை பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளதாக வடக்கு மாகாண முதல்வர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற வாள்வெட்டுக்குழுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தல்

Posted by - November 7, 2016
யேர்மனி , நொய்ஸ் மற்றும் தலைநகர் பேர்லினில் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்திருந்த லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் கலையரசன், மேஜர் மிகுதன், லெப். மாவைக்குமரன், லெப். ஆட்சிவேல் மற்றும் மேஜர் செல்வம் ஆகிய மாவீரர்களின் 9ஆம் ஆண்டு…
மேலும்

மாத்தறை வெலேகொடயில் இராட்சத முதலை(காணொளி)

Posted by - November 7, 2016
மாத்தறை வெலேகொட பகுதிக்குள் இன்று அதிகாலை இராட்சத முதலையொன்று வந்துள்ளது. நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ளதை அடுத்தே இந்த முதலை ஊருக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 அடி நீளமான இந்த முதலையானது, இலங்கையில் பிடிக்கப்பட்ட மிக பெரிய முதலை என வன…
மேலும்

ஹோலிப்பண்டிகை தொடர்பான தகவலில் உண்மையில்லை-ஆ.நடராஜன்(காணொளி)

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணத்தல் ஹோலிப் பண்டிகையை இந்திய துணைத்தூதரகமும், யாழ்ப்பாணத்தின் அமைப்பொன்றும் இணைந்த கொண்டாடவுள்ளதாக வெளிவந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்தார். ஹோலிப் பண்டிகை தொடர்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
மேலும்

சுண்டிக்குளத்தில் 118 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது(காணொளி)

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று அதிகாலை 118 கிலோ கேரள கஞ்சா தர்மபுரம் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுண்டிக்குளம் கடற்கரையில் படகொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இறக்கப்படுவதனை…
மேலும்

தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016
தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டுமென என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனேடிய அரசாங்கத்தின் வெளிநாட்டு அபிவிருத்தி மற்றும் நலன் மற்றும் திட்டமிடல் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது…
மேலும்