சமர்வீரன்

புண்மனது காயாது புலம்புகிறாள் தாயொருத்தி- வன்னியூர் குருஸ் –

Posted by - May 5, 2022
பன்னிரண்டாய் ஆண்டுகள் எண்கடந்து போயிற்று புண்மனது காயாது புலம்புகிறாள் தாயொருத்தி, எத்தனை பிள்ளையை பெற்றெடுத்த வயிறிதோ ஒத்தையில் கிடந்திங்கே ஒப்பாரி வைக்கிறதே… முத்தென்றும் மணியென்றும் பெற்றணைத்த பிள்ளைகளை கொத்தாய் இழந்தாளோ கொடியோரின் கொலைக்களத்தில், வித்துடல் எடுத்தாளோ விட்டிடறிப் போனாளோ வேரறுத்த தரையதிலே…
மேலும்

வன்னி மண்ணே அறியும்! – அகரப்பாவலன்

Posted by - May 4, 2022
கருந்துளைக்குள் உள்ளதை கருந்துளை மட்டுமே அறியும் .. ஆம் .. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்ததை வன்னிமண்ணே அறியும் .. குண்டுகள் வீழ்ந்து சிதறிய தமிழரின் சாட்சி அவர்களோடு அழிந்துவிட்டது .. துடிக்கத் துடிக்க எரிந்து சாம்பலானவர் சாட்சி சாம்பலாகிவிட்டது .. பிணங்களாய் குவிந்த…
மேலும்

நினைவுகள் மீட்டப்படுகின்றது!-அகரப்பாவலன்.

Posted by - May 3, 2022
நினைவுகள் மீட்டப்படுகின்றது – அதில் முள்ளிவாய்க்காலின் காட்சிகள் விரிகின்றது .. இதயத் துடிப்பின் சத்தம் குருதிப் பாய்ச்சலை வேகப்படுத்திய நேரம் .. தூரத்தில் இடிமுழக்கம் – அது மேகங்கள் மோதியல்ல கிபீர் அரக்கன் முழங்கிய எகத்தாளச் சத்தம் .. உலகநாடுகள் அள்ளிக்கொட்டிய…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப் பொறுப்பாளர், திரு இராஐ மனோகரன் அவர்களுக்கு 30 ஆண்டுகாலப் பணிக்காக மதிப்பளிப்பு.

Posted by - May 3, 2022
தமிழ்க் கல்விக்கழகம் யேர்மனியின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் பொறுப்பாளர் திரு இராஐ மனோகரன் அவர்களுக்கு 30.4.2022 அன்று ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற தமிழ்க்கல்விக் கழகத்தின் 32 ஆவது அகவை நிறைவு விழாவின் போது சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டது. யேர்மனியத் தமிழச் சிறார்களின்…
மேலும்

ஊடகங்களின் தவறா? இல்லை எம் உறவுகளின் தவறா?- வன்னியூர்க் குருஸ்-

Posted by - May 2, 2022
ஊடகங்களின் தவறா? இல்லை எம் உறவுகளின் தவறா? ஈழத் தமிர்ர்களின் இழப்பு மிகுந்த கனத்த நாட்களின் காலப் பதிவுகளை இந்நாட்களில் எங்கும் காணோமே!!! என்தான் நடந்தது எமக்கு இன்று? உக்ரைன் அழிவின் உச்சப் பதிவுகளை போட அனுமதிக்கும் பேஸ்புக்கும் யூடீப்பும் ஈழத்…
மேலும்

எல்லோரும் சேர்ந்தே அழித்தீர்கள்-அகரப்பாவலன்.

Posted by - May 2, 2022
மே பதினெட்டை நோக்கி மனம் செல்கிறது ! இனவெறியின் அனல்காற்று நமது நினைவுகளில் நெருப்பை அள்ளி வீசுகிறது ! கந்தகக் காட்டில் செந்தணல் தீயில் தமிழரின் உயிர்கள் இனவெறியின் ஓமகுண்டத்தில் ஆகுதியாகியதை கண்டோம் ! இன்று உலகெங்கும் போர்வெறியின் அனல் வீசுகிறது…
மேலும்

தமிழ்க் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு செல்லையா லோகானந்தம் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

Posted by - May 2, 2022
தமிழ்க் கல்விக்கழகம் யேர்மனியின் பொறுப்பாளர் திரு செல்லையா லோகானந்தம் அவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியக் கிளை அவரின் 30 வருடகால கல்விப்பணியினைப் பாராட்டி மதிப்பளித்தது. 30.4.2022 சனிக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் நடைபெற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் 32 ஆவது…
மேலும்

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழா – ஸ்ருட்காட் அரங்கு

Posted by - May 2, 2022
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைகளுக்கு அமைவாகத் திட்டமிட்டவாறு வெஸ்லிங், குன்ஸ்ரெற்ரர்,ஆன்ஸ்பேர்க், கொற்றிங்கன் என நான்கு அரங்குகளில் 32ஆவது அகவை நிறைவு விழா சிறப்புடன் நடைபெற்று, நிறைவாக ஸ்ருட்காட் அரங்கில் தாயகனின் சிந்தனையைப் பதியமிட்டவாறு சிறப்போடு நிறைவுற்றுள்ளது. வேற்றுமொழிச் சூழலிற் பிறந்து…
மேலும்

பிரான்சில் பல்லின மக்களின் 2022 மேதினப் பேரணியோடு பயணித்த தமிழீழ மக்கள்!

Posted by - May 2, 2022
பிரான்சில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2022 மே 1 தொழிலாளர் நாள் பேரணி பல்லின மக்களின் பிரமாண்ட பேரணியோடு எழுச்சியாக இடம்பெற்றிருந்தது. பாரிஸ் நகரின் Place de la République…
மேலும்

பெல்சியம் antwerpen மாநிலத்தில் மேதின எழுச்சிப் பேரணி.

Posted by - May 2, 2022
பெல்சியம் antwerpen மாநிலத்தில் மேதின எழுச்சிப் பேரணி நிகழ்வு இடம்பெற்றது . இதில் பல்லின மக்கள் மிக உணர்வுடனும் எழுச்சியுடனும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பெல்சியம் வாழ் தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்ட பதிவுகள்
மேலும்