நிலையவள்

எச்.ஐ.விக்கு எதிரான புதிய தடுப்பூசி பரிசோதனை நாளை தென்னாபிரிக்காவில்

Posted by - November 29, 2016
எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசியை பரீட்சிக்கும் பணிகள் நாளைய தினம் தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசியை பரீட்சிப்பதன் மூலம் எச்ஐவி தொற்றினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்த நிலைமையை கட்டுப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும் என்று அமெரிக்காவின்…
மேலும்

அரச வைத்தியர் சங்கத்தினர் நாளை வேலைநிறுத்தம்

Posted by - November 29, 2016
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை காலை முதல் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த…
மேலும்

கச்சதீவின் புதிய ஆலயத் திறப்பிற்கு இந்தியர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யக் கோரிக்கை

Posted by - November 29, 2016
கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள புதிய ஆலய திறப்பு விழாவில், இந்திய தமிழர்கள் 100 பேரை பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள புதிய ஆலய திறப்பு விழாவில்,…
மேலும்

கருணாவிற்கு டிசெம்பர் 7 வரை விளக்கமறியல்

Posted by - November 29, 2016
கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விநாயகமூர்த்தி முரளீதரன் இன்று கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்ற பிரதான நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
மேலும்

வவுனியாவில் மருத்துவர்கள் இன்று போராட்டம் (காணொளி)

Posted by - November 28, 2016
வவுனியாவில் மருத்துவர்கள் எட்கா உடன்படிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று மதியம் வைத்தியசாலை வளாகத்தினுள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எட்காவை இலங்கைக்குள் கொண்டுவரும் வரவு செலவை எதிர்ப்போம், மருத்துவர்க்கு தண்டப்பணம் விதிக்கும் வரவு…
மேலும்

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது (காணொளி)

Posted by - November 28, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று மாலை கைவிட்டுள்ளனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் தலைமையிலான நிர்வாகத்திற்கும் கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இன்று காலை ஊழியர்களின் சம்பள…
மேலும்

நாட்டில் ஊடக சுதந்திரம் முழு அளவில் உள்ளது –  கயந்த கருணாதிலக

Posted by - November 28, 2016
  நாட்டில் ஊடக சுதந்திரம் முழுஅளவில் உள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக பாராளுமன்றில் தெரிவித்தார். பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய அமைச்சுக்களுக்கான…
மேலும்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு எதிரான மனு விசாரணைக்கு-உயர் நீதிமன்றம்

Posted by - November 28, 2016
  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மூன்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தெற்கு அதிவேக வீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள சில தனியார் பேரூந்துகளுக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய…
மேலும்

திருகோணமலையில் வியாபாரிகள் பணிப்பகிஸ்கரிப்பு (காணொளி)

Posted by - November 28, 2016
வியாபார நிலையங்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு கோரிக்கை விடுத்து திருகோணமலை நகரசபை எல்லைக்கு உட்பட்ட, அநுராதபுரச்சந்தி பொதுச்சந்தை வியாபாரிகள் கடைகளை மூடி இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நுகர்வோர் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கருத்துத் தெரிவித்த வியாபாரிகள்….…
மேலும்

நுவரெலியா போடைஸ் தோட்டத்தொழிலாளர்கள் இன்று எதிர்ப்பு (காணொளி)

Posted by - November 28, 2016
  கூட்டு உடன்படிக்கை விதியை மீறிய தோட்ட நிர்வாகத்திற்கு, எதிராக நுவரெலியா ஹட்டன் போடைஸ் தோட்டத்தொழிலாளர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ள விதி முறைகளை மீறி செயல்பட்டதாக களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் ஹட்டன் போடைஸ்…
மேலும்