நிலையவள்

வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - December 1, 2016
வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும், ஊர்வலமும் இன்று இடம்பெற்றது. வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பவானி பசுபதிராஜா தலைமை தாங்கினார். இதன்போது எயிட்ஸ் நோய் பரவுவதன்…
மேலும்

கிளிநொச்சியில் “நாடா” புயலால் கல்லூரியின் தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக பாறி வீழ்ந்தது. (காணொளி)

Posted by - December 1, 2016
நாட்டின் வட பகுதியில் “நாடா” புயல்காற்று நிலைகொண்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இன்று காலை கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் காலை எட்டு முப்பது மணியளவில்  கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகள் பெரிதும் பாதிப்பு(படங்கள்)

Posted by - December 1, 2016
  முல்லைத்தீவில் ‘நாடா’ புயலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள “நாடா” எனும் புயலின் தாக்கத்தினால், வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும்  நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.…
மேலும்

மன்னார் மீனவர்களின் கடற்தொழில் பாதிப்பு

Posted by - December 1, 2016
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அதிகளவான மீனவர்கள் இன்று கடற்தொழிலுக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் பெரிய பாலத்தடியில் இருந்து ஆத்துவாய் பகுதியூடாக கடலுக்குச்செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்படையினர் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.…
மேலும்

கோட்டாபய வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி

Posted by - December 1, 2016
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடுகளுக்கு செல்வதற்கு சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே  அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மேலும்

வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர்

Posted by - December 1, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் 5 பேர் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர். தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை கரணமாக கரை ஒதுங்கியவர்கள் என பருத்தித்துறை பிரதேச செயலர் மற்றும் இந்தியத்துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். கடற்படையிடம்…
மேலும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வாய்க்கால்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

Posted by - December 1, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வாய்க்கால்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. புலோலி, சாவகச்சேரி, அம்பன், வேலணை, கீரிமலை, தொல்புரம், உரும்பிராய், நல்லூர், சண்டிலிப்பாய் கமநல சேவை நிலையங்கள் ஊடாக குறித்த புனரமைப்பு பணிகள் இடம்பெறுகின்றன. இதற்காக…
மேலும்

சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து இளைஞன் பலி

Posted by - December 1, 2016
சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இளைஞன் ஒருவன் அதே இடத்தில் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த 27 வயதுடைய சஜித்தானந்தன் கஜந்தன் என்ற இளைஞனே இவ்வாறு மரம் வீழ்ந்து உயிரிழந்தவராவார். சப்பச்சி வீதியால் சென்றுகொண்டிருந்த போது பலத்த…
மேலும்

வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்

Posted by - December 1, 2016
வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக தாயத்தில் கொடிய போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ள 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள் 27.11 .2016 அன்று யேர்மனியில் உள்ள அம்மா உணவகத்தின் அனுசரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரால் வழங்கப்பட்டது. தாயகத்தில்…
மேலும்

யேர்மனியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி

Posted by - November 30, 2016
மரணம் வென்ற மாவீரர்கள், மண்ணை நேசித்த மறவர்கள் ,இப் புனிதர்களை நினைவேந்தும் முகமாக யேர்மனியில் München நகரில் தமிழர் பண்பாட்டுக் கழகம் புலத்தில் பிறந்துவளரும் சிறார்கள் மற்றும் இளையோர்கள் மத்தியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி நிகழ்வுகள் நடாத்தினர்.…
மேலும்