நிலையவள்

கொழும்பில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

Posted by - July 15, 2017
அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிராண்பாஸ் மற்றும் தொட்டலங்க பிரதேசங்களில் இன்று 12 மணி நேரம், நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 2.00 மணியில் இருந்து…
மேலும்

வீதியில் இருக்கும் மக்களுக்கு தீர்வு வழங்குவது யார் ? 130 ஆவது நாகாகவும் தொடரும் போராட்டம்

Posted by - July 15, 2017
வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து ஆரம்பித்த போராட்டம் இன்று  இன்று 130 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளித்த  கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள்…
மேலும்

மன்/பற்றிமா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா – 2017

Posted by - July 15, 2017
மன்னார் பேசாலை பற்றிமா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஜே.ஸ்டானிஸ்லாஸ் தலமையில் 13.07.2017 வியாழக்கிழமை நண்பகல் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் அழைப்பின் பெயரில் வடமாகாண…
மேலும்

கிளிநொச்சியில் தடைகளை மீறி வயல் நிலங்களில் ஆழ் துளை கிணறுகள்

Posted by - July 15, 2017
வயல் நிலங்களில் ஆழ் துளைக் கிணறுகளை அமைக்க வேண்டாம் என்ற அதிகாரிகளின் உத்தரவுகளையும் மீறி பூநகரி குடமுருட்டிக் குளத்தின் கீழான வயல் நிலங்களில்  11.07.2017 மூன்று ஆழ் துளைக் கிணறுகளை விவசாயிகள் அமைத்துள்ளனர். குடமுருட்டிக் குளத்தில் இருந்து சிறுபோக நெற் செய்கைக்கான…
மேலும்

அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த முடியாது – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - July 14, 2017
பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடப்படும் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த முடியாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் உப செயலாளர், மருத்துவர் நலிந்த சொய்சா இதனைக் குறிப்பிட்டுள்ளார். சைட்டம் பிரச்சினை தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
மேலும்

உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் ஆராய்வு

Posted by - July 14, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்றது. இதன்போது, எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், 1977 ஆம் பெற்ற வெற்றியின் 40 ஆம் ஆண்டு…
மேலும்

முல்லைத்தீவு கிராமங்களுக்கான உளளுர் பேரூந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் – மக்கள்

Posted by - July 14, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பல கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் குமுழமுனை, முத்தையன்கட்டு, மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளின் பல கிராமங்கள் பஸ்…
மேலும்

முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு

Posted by - July 14, 2017
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவின் முத்தையன்கட்டுக் குளம் உட்பட காட்டாற்று வெள்ளம் நந்திக் கடல்…
மேலும்

இலங்கை – பங்களாதேஷ் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Posted by - July 14, 2017
நட்பு நாடுகளாக செயற்பட்டுவரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே காணப்படும் இருதரப்பு தொடர்புகளை பலமான அத்திவாரத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இரு நாட்டு அரச தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர். பங்களாதேஷிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ்…
மேலும்

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 25 இல்

Posted by - July 14, 2017
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு தொடர்பான தீர்ப்பொன்று எதிர்வரும் ஆகஸ்ட் மதம் 25 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. குறித்த வழக்கின் குற்றச்சாட்டு திருத்தம் தொடர்பான தீர்ப்பே அன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. கூட்டுறவு மொத்த வியாபார கூட்டுத்தாபனத்தின் 153 ஊழியர்களை…
மேலும்