நிலையவள்

மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

Posted by - September 18, 2017
யாழ்ப்பாணத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் ,இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை…
மேலும்

பெண்ணொருவர் மீது அசிட் வீசி கொலை

Posted by - September 18, 2017
தனது விதவை மருமகள் மீது அசிட் வீசி கொலை செய்த மாமனார் தொடர்பான செய்தி கடுவலை – கொரதொட்ட பிரதேசத்தில் தெரியவந்துள்ளது. 34 வயதான அந்த பெண்ணின் மீது அசிட் வீசிய நபரின் வயது 74 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்ணின்…
மேலும்

5 மாடி கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்தது;6 பேர் மருத்துவமனையில்

Posted by - September 18, 2017
அஹங்கம – பெலஸ்ஸகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிக்குண்டு காயமடைந்த 6 பேர் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் 5 மாடி கட்டிடம் கொண்ட ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வந்துள்ள நிலையில்,…
மேலும்

வீரகுமார திசாநாயக்க மீதான பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது

Posted by - September 18, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த நீதிமன்ற பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது. அவர் கொழும்பு முதன்மை நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

நான்கு சீன பிரஜைகள் கைது!

Posted by - September 18, 2017
சட்டவிரோத சிக்கரெட்டுக்கள், வல்லப்பட்டை மற்றும் கோடா வைத்திருந்த நான்கு சீன பிரஜைகளை கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து பொலிஸார்  கைது செய்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொண்ட  சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட சந்தேக…
மேலும்

எதிர்வரும் வருட பாதீட்டில் மீனவர்களுக்கு சலுகைகள் வழங்க நடவடிக்கை

Posted by - September 18, 2017
கடற்றொழிலுக்காக பயன்படுத்தப்படும் புதிய படகுகளுக்காக கூடுதல் சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வருட பாதீட்டை மையப்படுத்தி இந்த சலுகைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கடற்றொழிலில் புதிய படகுகளை பயன்படுத்தும் போது ,…
மேலும்

பெண்களை போல் ஆடை அணிந்து நடமாடிய இளைஞன்!

Posted by - September 18, 2017
பெண்களை போல் ஆடைகளை அணிந்து இரவு நேரங்களில் பண்டாரளை நகரில் நடமாடிய நபரொருவரை பண்டாரவளை காவல்துறை கைது செய்துள்ளது. 23 வயதான குறித்த நபர் கடந்த 16 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் இராணுவத்தில் சேவை…
மேலும்

தேர்தல் முறையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் – விஜித்

Posted by - September 18, 2017
இருபது அல்லது அதற்கு அப்பால் சென்று அரசியல் சீர்த்திருத்தம் ஒன்று கொண்டுவந்து தேர்தல் முறையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். தற்போது…
மேலும்

மாகாண சபை தேர்தலை மீண்டும் காலம் தாழ்த்த அரசாங்கம் முயற்சி!

Posted by - September 18, 2017
நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள இருபதாவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபை தேர்தலை மீண்டும் காலம் தாழ்த்த அரசாங்கம் முயற்சிப்பதாக கபே அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மாகாண சபை தேர்தலை நடத்தும் முறையை மாற்றுவதற்கான யோசனையொன்று தற்போது சட்டமூலமாக்கப்பட்டு வருவதாக அதன்…
மேலும்

காவல்துறையினர் மீது தாக்குதல்;4 பேர் கைது

Posted by - September 18, 2017
வெலிஒய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மொத்தமாக 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர். வெலிஒய ஜனகபுர பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில்…
மேலும்