நிலையவள்

கடுபொத வாகன விபத்தில் 12 பேர் காயம்

Posted by - November 15, 2017
கடுபொத, கடஹபொல பிரதேசத்தில் கெப் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கெப் வானத்தில் பயணித்த 7 பெண்கள் , மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண்களும் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் சிக்கிய 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடுபொத பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் ஒன்பது…
மேலும்

இளம் கோடீஸ்வர வர்த்தகர் தற்கொலை

Posted by - November 15, 2017
அத்துருகிரிய, கஹன்தொட்ட, அலுபோவத்த பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். அதில், கடன் சுமை தாங்க முடியாமல் தான் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதாகக்…
மேலும்

வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

Posted by - November 15, 2017
பரசங்கசாகஹவெவ – மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதால் வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 08.45 அளவில் ரஜரட்ட ரெஜின என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதனால், இன்று…
மேலும்

UNP தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் பங்­கு­தா­ர­ராக இருக்­கும்­வ­ரையில் தாம் அதில் இணைந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை-G.L.பீரிஸ்

Posted by - November 15, 2017
கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இணைந்­து­கொள்­ளு­மாறு அக்­கட்சி அழைப்பு விடுத்­துள்­ளது. எனினும் அக்­கட்சி ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் பங்­கு­தா­ர­ராக இருக்­கும்­வ­ரையில் தாம் அதில் இணைந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை என ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள்…
மேலும்

சபாநாயகர் – கடற்படைத்தளபதி சந்திப்பு

Posted by - November 15, 2017
புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய கடற்படை தளபதியாக பதவியேற்றத்தை தொடர்ந்து வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க சபாநாயகரை சந்திக்கும் முதலாவது…
மேலும்

தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் …..-விக்கி

Posted by - November 15, 2017
நாமே தயா­ரித்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்றித்தன­மாக  கைவி­டு­வ­தற்கு  எமது தலை­மைகள்  முன்­வந்­த­மையே கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­பட  கார­ண­மாக அமைந்­துள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்சர்  சி.வி. விக்­கி­னேஸ்­வரன்   தெரி­வித்­துள்ளார். இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள். எனவே எமக்கு  எமது சட்­ட­ரீ­தி­யான  நியா­ய­மா­ன­கோ­ரிக்­கை­களை  அதன்­பொ­ருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க…
மேலும்

ஜெனிவா சமர் இன்று

Posted by - November 15, 2017
ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் இடம்­பெற்­று­வரும்  28ஆவதுகாலக்­கி­ரம மீளாய்வு செயற் குழு    கூட்­டத்­தொ­டரில் இன்று புதன்­கி­ழமை இலங்கை குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.  இதன்­போது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் இலங்கை எவ்­வா­றான முன்­னேற்­றத்தை அடைந்­துள்­ளது என்­பது குறித்து கேள்­விகள் எழுப்­பப்­ப­ட­வுள்­ளன.…
மேலும்

பெற்றோல் நெருக்கடிக்கு கூட்டுத்தாபனத்தின் பொடுபோக்கே காரணம்- குழு அறிக்கை

Posted by - November 15, 2017
பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் அதனை முகம்கொடுக்கத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காது பெற்றோலியக் கூட்டுத்தாபம் பொடுபோக்குக் காட்டியுள்ளது என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் போதிய எரிபொருள் கையிருப்பில் இல்லாதபோதும்…
மேலும்

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்- மஹிந்த

Posted by - November 15, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தானோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ நேரடியாகப் போட்டியிடாததனால், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ப போட்டியிட சந்தர்ப்பத்தை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.…
மேலும்

அமைச்சரவைக் கூட்டத்தில் அர்ஜுன மீது அமைச்சர்கள் பாய்ச்சல்

Posted by - November 15, 2017
தேவையான அளவு பெற்றோலை கையிருப்பில் வைத்திருக்காமையே நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி நிலைமைக்குக் காரணம் என நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் மீது அமைச்சர்கள் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். பெற்றொல் தட்டுப்பாட்டுக்கான…
மேலும்