நிலையவள்

முதுகெழும்புள்ளவர்களாயின் சு.க விலிருந்து விலகி புதிய கட்சி அமைக்கட்டும் –சிறிசேன

Posted by - January 15, 2018
புதிய கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என ஊடகக் கலந்துரையாடலில் குறிப்பிடுகின்றவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியல்லாது வேறு கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு கூறுவது நகைப்புக்கிடமானதாகும் என்றும் மனச்சாட்சிக்கேற்ப அரசியலில் ஈடுபடுமாறு தாம் அவர்களுக்கு கூறுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் நேற்று ஹோமாகம…
மேலும்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரித்திபத்மன் சூரசேன நியமனம்

Posted by - January 15, 2018
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரித்திபத்மன் சூரசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துக்கொண்டுள்ளார். இதுவரை அதன் தலைமை நீதிபதியாக செயற்பட்ட எல்.டீ.பீ.தெஹிதெனிய உயர்நீதிமன்றின் நீதிபதியொருவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாரிய ஊழல்,மோசடி விசாரணை ஆணைக்குழுவின்…
மேலும்

கல்வியியல் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி

Posted by - January 15, 2018
கல்வியில் கல்லூரிக்கு இவ்வருட கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி தலைமை ஆணையாளர் கே.எஸ்.பண்டார தெரிவித்துளார். கல்வியியல் கல்லூரிக்கு இவ்வாண்டில் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக கல்விப்பொதுதராதர உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குறித்த அனுமதியில்…
மேலும்

புதையல் தோண்டிய நால்வர் கைது

Posted by - January 15, 2018
ஹசலக, உள்பதகம பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹசலக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பதுளை, உள்பதகம…
மேலும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 19 வேட்பாளர்கள் கைது

Posted by - January 15, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டதிட்டங்களை மீறியமை மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கைது செய்யப்பட நபர்களுள் 19 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 57…
மேலும்

உழவர் திருநாளிலேயே உழவர் பலியான சோகம் !

Posted by - January 14, 2018
கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கற்கிளாச்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சித்தாண்டி பிரதான வீதியை அண்டி…
மேலும்

கருக்கலைப்பு மாத்திரைகளுடன் இருவர் கைது.

Posted by - January 14, 2018
சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இருவரிடமிருந்தும் ஆயிரத்து 260 சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளும் 4 ஆயிரம் போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…
மேலும்

மங்கள – சுஸ்மா டில்லியில் பேச்சுவார்த்தை

Posted by - January 14, 2018
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் மங்கள சமர வீர அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவாராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் விரிவான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின்…
மேலும்

2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - January 14, 2018
மன்னார் எருக்கலம்பிட்டி பஸ் தரிப்பிட நிலையத்தில் வைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் வெள்ளிக்கிழமை இரவு அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள்…
மேலும்

இளைஞர் தற்கொலை விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

Posted by - January 14, 2018
புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கைதி உயிரிழந்தமை தொடர்பில் சுயாதீன பொறிமுறையின் கீழ் விசாரணை செய்யுமாறு…
மேலும்