நிலையவள்

சிங்கப்பூர் உடன்படிக்கை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்-அநுருத்த பாதெனிய

Posted by - June 22, 2018
சிங்கப்பூர் உடன்படிக்கை சம்பந்தமாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக தொழிலாளர்களின் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய இதனைக் கூறியுள்ளார். நேற்றைய தினம் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க…
மேலும்

ரஜரட்ட பல்கலைகழகம் காலவரையின்றி மூடப்பட்டது

Posted by - June 22, 2018
ரஜரட்ட பல்கலைகழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைகழக மாணவர் குழு ஒன்று நேற்று (21) மாலை நிர்வாக கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு தங்கி இருக்க முற்பட்டதன் காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைகழக உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.…
மேலும்

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - June 22, 2018
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கரபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கோளாறு காரணமாக பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்

கண்டி வன்முறை பிணையில் நான்கு பேர்

Posted by - June 22, 2018
கண்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5000 ரூபாவான ரொக்கப் பிணை…
மேலும்

வடக்கு,கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஒரே அணியாக களமிறங்கவேண்டும்- செல்வம்

Posted by - June 22, 2018
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட தமிழ்க் கட்சிகள் ஒரே அணியாக இணைந்து களமிறங்க வேண்டும். தனிப்பட்ட காரணிகளுக்காக பிரிந்து நிற்பது தமிழரின் ஒற்றுமையையே சீரழித்து விடும் என ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
மேலும்

கோட்டாபயவுக்கு அனைத்து மக்களின் ஆதரவு இருந்தாலே வெற்றி பெற முடியும்- டிலான்

Posted by - June 22, 2018
ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்காக களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றவராக இருத்தல் வேண்டும் எனவும் அவ்வாறிருந்தாலேயே தமது ஆதரவை வழங்குவோம் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக வந்தால்,…
மேலும்

இன்று பிணை வழங்காவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் – சிங்கள ராவய

Posted by - June 22, 2018
குற்றவாளியாக இனம்காணப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் பிக்குகள் சிலர் தயாராகியுள்ளனர். ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரித் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு…
மேலும்

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி

Posted by - June 22, 2018
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரிகம ​ஹோட்டலுக்கு அண்மையில், இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், இத்தாசி ஷமிந்த குமார என்பவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஜபா படையணியில் சேவையாற்றிய இவர், 2008 ஆம் ஆண்டு முதல், கடமைக்கு சமூகமளிக்கவில்லையென பொலிஸார்…
மேலும்

புறக்கோட்டையை பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்ற திட்டம் – சம்பிக்க

Posted by - June 22, 2018
புறக்கோட்டையை பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றும் முயற்சிக்குரிய முன் சாத்தியக்கூறு ஆய்வு நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த முயற்சிக்காக பிரெஞ்சு அரசாங்கம் பத்து இலட்சம் டொலரை முதலீடு செய்கிறது. புறக்கோட்டையை பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றுவதன் மூலம் கொழும்பிலும், சுற்றுப்புறக்களிலும்…
மேலும்

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு

Posted by - June 22, 2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு மனு இன்று  (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோமாகம மேல்நீதிமன்றத்தில் கடந்த 15 ஆம் திகதி இந்த மேன்முறையீட்டு மனுவை…
மேலும்