நிலையவள்

தடைசெய்யப்பட்ட புலிகள் இலங்கை வந்து சென்றவர்கள்- மகிந்த

Posted by - June 22, 2018
விடுதலைப்புலிகளின் ஆதரவு உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்து கிளிநொச்சியில் தமது நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து நாட்டை விட்டு  வெளியேறிய பின்னரே இந்த அரசாங்கம் அவர்களை நாட்டுக்கு வருவதற்கான தடையினை விதித்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.…
மேலும்

கோத்தபாய ஜனாதிபதியானால் நாட்டை கடவுளே காப்பாற்றவேண்டும்- நவீன்

Posted by - June 22, 2018
வடக்கில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளிற்காக நிலத்தை கோரும்போது அவர்கள் அதனை தமிழர் சிங்களவர் விவகாரமாக பார்க்கின்றனர் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன்திசநாயக்க தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளதாவது. 2020 ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட முடியாது என்பதே  எனது…
மேலும்

அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள் – மனோ

Posted by - June 22, 2018
அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின்…
மேலும்

125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு

Posted by - June 22, 2018
125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 28ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சசி மஹேந்திரன் இந்த உத்தரவை…
மேலும்

முஸ்லிம்களுக்கு எதிரான கண்டி வன்முறை – நால்வருக்கு பிணை

Posted by - June 22, 2018
கண்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5000 ரூபாவான ரொக்கப் பிணை…
மேலும்

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

Posted by - June 22, 2018
குற்றவாளியாக இனம் காணப்பட்டு 6 மாதகால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்துவந்த கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தன்னை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு…
மேலும்

யாழ் அஞ்சல் ஊழியர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில்……………

Posted by - June 22, 2018
தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 7.30 மணியளவில் ஒன்றுகூடிய ஊழியர்கள் தமது அடையாள உண்ணாவிரத…
மேலும்

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடலட்டையில் ஈடுபட்ட மூன்று படகுகள் மடக்கிப் பிடிப்பு!!

Posted by - June 22, 2018
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட தென்பகுதி மீனவர்களின் மூன்று படகுகள் பிடிக்கப்பட்டு மீன்பிடி நீரியல் வள திணைக்களத்தினுடாக நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.வடமாட்சி கிழக்கு கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நேரத்தில் கடலட்டை பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கன படகுகள் ஈடுபட்டன. அவற்றில் 3…
மேலும்

பகிடிவதை தாங்கமுடியாமல் மொட்டையடித்த 25 மாணவர்கள்…!

Posted by - June 22, 2018
வவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர். சிரேஸ்ட மாணவர்களின் கொடுமையால், வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றில் இந்த 25 மாணவர்களும் மொட்டையடிக்கச் சென்றுள்ளனர்.…
மேலும்

நீரில் மூழ்கிய 10 வயது சிறுவன் மாயம்

Posted by - June 22, 2018
அம்பலாந்தொட்டை – ரிதிகம பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராட சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குறித்த சிறுவன் 10 வயதானவர் எனவும் , தனது நண்பர்களுடன் நேற்று(21-06-2018) மாலை நீராட சென்ற வேளையே நீரில் மூழ்கியுள்ளார். பின்னர் இது…
மேலும்