நிலையவள்

சிறுத்தையை கொலை செய்த 4 பேருக்கு 29 வரை விளக்கமறியல்

Posted by - June 25, 2018
கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் சிறுத்தையொன்றை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை சிற்றூழியர் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று (25) கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மேலதிக மஜிஸ்ட்ரேட்…
மேலும்

சரண குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துக- நீதிபதி உத்தரவு

Posted by - June 25, 2018
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் லங்கா ஜயரத்ன இன்று (25) உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருக்கும் போது 80 லட்சத்து 95 ஆயிரம் ரூபா…
மேலும்

எமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை சிதைப்பதற்கு நாம் எவருக்கும் இடமளிக்க முடியாது-சிவஞானம் சிறீதரன்

Posted by - June 25, 2018
எமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை சிதைப்பதற்கு நாம் எவருக்கும் இடமளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மண்ணில் இருந்து ஆன்மீக சமூகப்பணிகள் ஆற்றிய பெரியார்களின் சிலைகளை நேற்றையதினம் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே…
மேலும்

அமைச்சு பதவிக்காக கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை-பா.அரியநேத்திரன்

Posted by - June 25, 2018
தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை பெறவேண்டும் என சிலர் ஆலோசனை கூறுகின்றனர் வடகிழக்கு தமிழ்மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு அமைச்சு பதவிகளை பெற்று அபிவிருத்தி செய்யுங்கள் என எந்த தேர்தலிலும் வாக்களிக்கவில்லை அதேபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பும் எந்த தேர்தல் பிரசாரத்திலும் அல்லது தேர்தல் விஞ்ஞாபனத்திலும்…
மேலும்

2 மாதத்திற்குள் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொள்ளலாம் – கோத்தாபய

Posted by - June 25, 2018
இன்னும் இரண்டு மூன்று மாத காலத்திற்குள் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நிறைவடையச் செய்து கொள்ள முடியும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டீ.ஏ.ராஜபக்ஷ நூதனசாலை நிர்மாணிப்பின் போது இடம்பெற்றதாக கூறப்படும் பண மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை…
மேலும்

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - June 25, 2018
டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் சேவைகள் அமைச்சிற்கு முன்னால் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை முதல் கோட்டை வரையான வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும்

பெரும்போகத்திலிருந்து சோளத்திற்கு உத்தரவாத விலை-மஹிந்த அமரவீர

Posted by - June 25, 2018
பெரும்போகத்திலிருந்து சோளத்திற்கு உத்தரவாத விலையொன்றை நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு சோளச் செய்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக அடுத்த பெரும் போகத்திலிருந்து இந்த உத்தரவாத விலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, உத்தரவாத விலையின் கீழ் மரவள்ளிக்கிழங்கை…
மேலும்

வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம்

Posted by - June 25, 2018
கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த தெஹிவளை பொலிஸ் நிலையமும் மொரட்டுவை பல்கலைக்கழமும் இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளது. முறையான பொதுமக்கள் போக்குவரத்து திட்டம் ஒன்று விருத்தி செய்யப்படும் வரை, அமையவுள்ள ஒரு…
மேலும்

ஒரு கருத்தை வைத்து மகாநாயக்கர்களை அரசாங்கம் அவமதிக்கின்றது- மஹிந்த

Posted by - June 25, 2018
நாட்டில் இன்று பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ள போதும், மகாநாயக்க தேரர் ஒருவரின் கருத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் அரசாங்கம் செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில்…
மேலும்

கலாசார மரபுரிமைகளை எதிர்கால தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்- சிறிசேன

Posted by - June 25, 2018
கீர்த்திமிக்க வரலாற்று பாரம்பரியங்களைக் கொண்ட எமது கடந்தகால கலாசார மரபுரிமைகளை பாதுகாத்து அவற்றை எதிர்கால தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (24) பிற்பகல், புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பொலன்னறுவை ஹிங்குரக்கொட உனகலா…
மேலும்