நிலையவள்

தூக்கு தண்டனை நடைமுறைபடுத்தப்பட வேண்டும்-இராதாகிருஸ்ணன்

Posted by - July 18, 2018
இலங்கையில் இருக்கின்ற பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனையை நடைமுறைபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.…
மேலும்

கல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 18, 2018
கிளிநொச்சி, கல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரம் புலேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (17) கல்மடு…
மேலும்

எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன

Posted by - July 18, 2018
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணங்களும் அத்தியவசிய பொருட்களுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள்…
மேலும்

பிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி

Posted by - July 18, 2018
தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி அறிவிக்கப்படும் என்று…
மேலும்

ஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது

Posted by - July 18, 2018
குளியாபிட்டிய பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு அதிகாரியொருவர் ஹெரோயின் பக்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் 6 ஹெரோயின் பக்கட்டுக்களுடன் பாடசாலைக்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு

Posted by - July 18, 2018
மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போ​தைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக, 18 பேர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணமே, இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழர்கள் ஏழுபேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது. 2003ஆம்…
மேலும்

அரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு

Posted by - July 18, 2018
அரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் வசிப்பதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிறேபந்து ருவன் பத்திரன தெரிவித்துள்ளார். அவர்களுள் 50,000 பேருக்கு இந்த வருட…
மேலும்

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்

Posted by - July 18, 2018
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த 40 வயதுடைய ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 7.93 கிராம் ஹெரோயினை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காகவே குறித்த நபருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

கலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது

Posted by - July 18, 2018
இந்த அண்டின் கடந்த 06 மாத காலத்தில் கலால் குற்றங்கள் சம்பந்தமாக 25,214 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கலால் திணைக்களம் கூறியுள்ளது.சுமார் 1000 கலால் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடையே…
மேலும்

தலைகீழாக நின்றாலும் நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்- ஊவா முதலமைச்சர்

Posted by - July 18, 2018
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அல்லாது ராஜபக்ஷ குடும்பத்தில் வேறு எவருக்கும் கூட்டு எதிர்க் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படுவதில்லையென ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்