நிலையவள்

பொன்சேகா சொன்னதையே நானும் சொல்கின்றேன்- மஹிந்த

Posted by - October 3, 2018
வடக்கு, கிழக்கில் யுத்தத்தை எவ்வாறு முடிவு செய்தோம் என்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூறிய அதே கருத்தைத் தான் தானும் கூறவேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அன்று யுத்தத்தை முடிவு செய்தது யார்? எவ்வாறு? என்பதை இந்நாட்டிலுள்ள…
மேலும்

பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க தயாராகுங்கள்- ரணில்

Posted by - October 3, 2018
பொருளாதார நெருக்கடியை சந்திக்கத் தயாராகுமாறு நிதி அமைச்சு, வெளிநாட்டு வர்த்தக அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பவற்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார். அமெரிக்காவினால் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக எதிர்வரும் நவம்பர் மாதம் முதல்…
மேலும்

தலவாக்கலையில் கற்பாறைகள் சரிவு

Posted by - October 3, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவில் நேற்று மாலை பெய்த கடும் மழையினால் கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள சுமார் 2000 அடி உயரம்…
மேலும்

விக்னேஸ்வரனுக்கு தீர்வையற்ற வாகனம் – அமைச்சரவையால் நிராகரிப்பு

Posted by - October 3, 2018
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை போன்று, தீர்வையற்ற வாகனம் வழங்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவை நிராகரித்துள்ளதென அறியமுடிகிறது. ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன சலுகையைவிடக்…
மேலும்

ஒரு கொள்­ளைக்­கார கும்­பலை விரட்­டி­விட்டு இன்­னொரு கொள்­ளைக்­கார கும்­பலை ஆட்­சிக்கு கொண்­டு­வந்­து­விட்டோம்-அநுரகுமார

Posted by - October 3, 2018
ஒரு கொள்­ளைக்­கார கும்­பலை விரட்­டி­விட்டு இன்­னொரு கொள்­ளைக்­கார கும்­பலை ஆட்­சிக்கு கொண்­டு­வந்­து­விட்டோம். மீண்டும் இரண்டில் ஒரு கொள்­ளைக்­கார கும்­ப­லுக்கு ஆட்­சியை கொடுக்க இட­ம­ளிக்க கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மக்கள் விடு­தலை…
மேலும்

ஆவா குழுவை கட்டுப்படுத்த இராணுவம் தேவையில்லை- ரஞ்சித் மத்தும பண்டார

Posted by - October 2, 2018
வடக்கில் செயற்படும் ஆவா குழுவினை கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவதற்கு உதவ தயார் என இராணுவதளபதி தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ள நிலையிலேயே…
மேலும்

ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம் விசாரணைக்கு

Posted by - October 2, 2018
அரசாங்கத்துக்கு நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பிரதிவாதிகள் மூன்று பேருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு…
மேலும்

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அலைபேசி செயலி

Posted by - October 2, 2018
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் கலாசார பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் தொடர்பிலானத் தகவல்களை இலகுவாக தெரிந்துக்கொள்வதற்கு புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடுவதற்கும் இணையத்தளம் ஊடாக, அனுமதிச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளவும் கூடியதுமான, அலைபேசி…
மேலும்

பேலியகொடை ஊடாக கட்டுநாயக்க அதிவேக பாதைக்கு உள்நுழைய தற்காலிக தடை

Posted by - October 2, 2018
பேலியகொடை ஊடாக கட்டுநாயக்க அதிவேக பாதைக்கு பிரவேசிக்கும் பாதை இம்மாதம் 4ம் திகதி முதல் 20ம் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது. புதிய களனி பாலத்தின் நிர்மாண பணிகள் காரணமாக இந்த பாதை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

யட்டியந்தோட்டையில் இரட்டைக் கொலை

Posted by - October 2, 2018
யட்டியந்தோட்டை, ஹல்கொல்ல பிரதேசத்திலுள்ள உடகில்ம தோட்டத்தில் இன்று (02) பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைக் கொலை செய்ததன் பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருப்பவர் அதேதோட்டத்தில் வசிக்கும் காவலாளியின் மகன்…
மேலும்