நிலையவள்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது!

Posted by - November 3, 2025
ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தீர்வு கிடைக்கப்பெறாமையினால் தொழிற்சங்க போராட்டம் தொடர்வதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்கம் இன்று (3) தெரிவித்துள்ளது. இது…
மேலும்

திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் கவலை

Posted by - November 3, 2025
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சந்தைக்கு செல்வோர் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது திருநெல்வேலி சந்தையில் நேற்றைய…
மேலும்

இனி அடுத்த வருடமே அகழ்வு பணி

Posted by - November 3, 2025
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு…
மேலும்

ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 3, 2025
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று (3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர்…
மேலும்

ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு

Posted by - November 3, 2025
ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 கஞ்சா சேனைகளில் 85,000 இற்கும் அதிகமான பெரிய கஞ்சா செடிகள் மற்றும் 4 சிறிய நாற்றங்கால்கள்…
மேலும்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு – பெண் மீண்டும் விளக்கமறியலில்!

Posted by - November 3, 2025
போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்…
மேலும்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சமபோஷ கைது

Posted by - November 3, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான சமபோஷ என்ற மதுசங்க என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘வெல்லே சாரங்கா’ என்ற கமகே சாரங்கா…
மேலும்

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்

Posted by - November 3, 2025
சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத…
மேலும்

இசை நிகழ்ச்சியில் 31 இளைஞர், யுவதிகள் கைது

Posted by - November 2, 2025
மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 31 இளைஞர், யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறு கைது…
மேலும்

கலவானை துப்பாக்கிச் சூட்டின் சந்தேகநபர் கைது

Posted by - November 2, 2025
கலவானை, தெல்கொட பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இரண்டு பேர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேகநபர் கலவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கலவானை, கொஸ்வத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பு பிரிவிற்கு…
மேலும்