நிலையவள்

இன்றைய வானிலை

Posted by - November 6, 2025
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் பல தடவைகள்…
மேலும்

நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கை – பலர் கைது

Posted by - November 5, 2025
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடைய 16 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
மேலும்

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

Posted by - November 5, 2025
நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.…
மேலும்

மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை

Posted by - November 5, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத் தேவையில்லை. எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே. இதுவே எமது ஒரே கோரிக்கை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு…
மேலும்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் சுனாமி ஒத்திகை!

Posted by - November 5, 2025
இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் சுனாமி ஒத்திகைப் பயிற்சி இன்று (05) காலை பருத்தித்துறை மெதடிஸ்த் பெண்கள் பாடசாலையில் ஆரம்பமானது. காலை 9:15 மணியளவில் சுனாமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவிகள்…
மேலும்

கிரான்குளத்தில் காட்டு யானைகளை துரத்தும் பணி – களத்தில் சாணக்கியன்

Posted by - November 5, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்குள நிரப்பரப்பில் கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு வாவியை அண்டிய சதுப்புநிலப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நேற்று (04) மாலை கிரான்குளம் கிராமத்தில் காட்டு யானைகள் சஞ்சரிப்பதை…
மேலும்

இறக்குமதி பெரிய வெங்காயம் குறித்து வௌியான தகவல்

Posted by - November 5, 2025
இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு சுமார் 2 இலட்சத்து 39 ஆயிரம் மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் பெரிய வெங்காய அறுவடை தொடங்கிய ஓகஸ்ட் மாதம் முதல் கடந்த ஒக்டோபர் 31…
மேலும்

இன்றைய வானிலை

Posted by - November 5, 2025
மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
மேலும்

இன்று சுனாமி ஒத்திகை

Posted by - November 5, 2025
உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது. யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியப் பயிற்சியாக இது ஏற்பாடு…
மேலும்

அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்

Posted by - November 5, 2025
அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, UPS நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த…
மேலும்