நிலையவள்

பதுளை – கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

Posted by - November 24, 2025
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.
மேலும்

தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் – ஒருவர் கைது

Posted by - November 24, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சந்தேக நபர்களால் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளையும் வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளதாகத்…
மேலும்

தொடரும் சீரற்ற காலநிலை – 10 பேர் பலி

Posted by - November 24, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தம் காரணமாக இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 504 குடும்பங்களைச் சேர்ந்த…
மேலும்

புன்னாலைக்கட்டுவன் கொலை – சந்தேகநபர் கைது

Posted by - November 24, 2025
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (24) காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மது அருந்த சென்ற நபர்…
மேலும்

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA

Posted by - November 24, 2025
வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச,…
மேலும்

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்

Posted by - November 24, 2025
இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல் மற்றும் இலங்கையில் உள்ள இன…
மேலும்

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் பலி

Posted by - November 24, 2025
பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில் வீதியை கடந்த பாதசாரி ஒருவர் மீது, வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த…
மேலும்

அருண பத்திரிகை பிரதம செய்தி ஆசிரியர் CIDக்கு அழைக்கப்பட்டமைக்கு கண்டனம்

Posted by - November 24, 2025
பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக அருண பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மஹிந்த இலேபெருமவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை ஊடக…
மேலும்

கந்தகெட்டிய வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

Posted by - November 24, 2025
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று (24) காலை தோல்வியடைந்தது. கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட…
மேலும்

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 24, 2025
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று (24) பொல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் சேவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படைவீரர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.…
மேலும்