நிலையவள்

அம்பலாங்கொடையில் வர்த்தக தொகுதியில் தீப்பரவல்

Posted by - November 9, 2025
அம்பலாங்கொடை நகரில் இன்று (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்

Posted by - November 9, 2025
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த…
மேலும்

ஆசிய கிண்ணம் இந்தியாவுக்கு வழங்கப்படுமா?

Posted by - November 9, 2025
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டுபாயில் நடந்த ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது. இறுதிப்போட்டி உட்பட 3 முறை இந்திய அணி பாகிஸ்தானை இந்த தொடரில் வீழ்த்தியது. இந்த போட்டியின் போது பஹல்காம் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க…
மேலும்

மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது

Posted by - November 9, 2025
பாமர மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறுப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரவு செலவு திட்டமாக இதை பார்க்கலாம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…
மேலும்

நிதியின்மையினால் அமெரிக்காவில் 1400 விமான சேவைகள் ரத்து

Posted by - November 9, 2025
அமெரிக்க அரசாங்க நிதி முடக்கத்தின் காரணமாக, எப்.ஏ.ஏ எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க பாராளுமன்றில் நிதி சட்டமூலத்திற்கு அனுமதி கிடைக்காத காரணத்தால், அரச துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட…
மேலும்

ரயிலில் மோதி ஒருவர் மரணம்

Posted by - November 8, 2025
களனி – வனவாசல பகுதியில் உள்ள ரயில் கடவையில் நேற்று ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மாலம்பே – கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய திருமணமாகாத நபர் ஆவார். உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு…
மேலும்

பெருந்தொகை போதைப்பொருளுடன் இலங்கை மீன்பிடி படகு ஒன்று சுற்றிவளைப்பு

Posted by - November 8, 2025
சுமார் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 6 இலங்கை மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகையும் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த…
மேலும்

வாகனங்களுக்கான லீசிங் வசதிகளுக்கான வீதத்தில் திருத்தம்

Posted by - November 8, 2025
வாகனங்களுக்கான குத்தகை வசதிகளை வழங்குவதற்கான வீதங்களை திருத்தம் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதன்படி, தற்போது வணிக வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை வீதம் 70% ஆகவும், தனியார் வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை வீதம் 50% ஆகவும் திருத்தம் செய்ய இலங்கை…
மேலும்

எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்காதிருக்க விமல் கட்சி முடிவு

Posted by - November 8, 2025
நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அதன் தலைவர் விமல் வீரவங்ச வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்

Posted by - November 8, 2025
தடுப்பு காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால்,…
மேலும்