காவிரியில் தண்ணீர் திறந்து விட இயலாது என்றும், தமிழக அரசின் வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் சட்டப்படி சந்திப்போம் என்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அவசரமான இலங்கை விஜயம் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. எவ்வாறாயினும் செயலாளர் நாயகத்தை வரவேற்கின்றோம் . ஆனால் சர்வதேச விசாரணைகளுக்கு உள் நாட்டில் இடமில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கிளிநொச்சியின் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்படும் புத்த விகாரை திட்டமிட்ட குடியேற்றத்தை நோக்கமாக கொண்டது என்று கூறும் பெயர் குறிப்பிட விரும்பாத கிளிநொச்சி இராணுவ அதிகாரி ஒருவர், இதுவே தமிழ் – சிங்கள மக்களிடையே பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும்…
தமது உறவுகளைத் தொலைத்த 7200 குடும்பங்கள் மரணச்சான்றிதழைப் பெற்றுள்ளன. அவர்கள் அனைவருக்கும் காணமல்போனேர் சான்றிதழைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள். அதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு நீண்டகாலமாக திறக்கப்படாதிருக்கும் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை அமைப்பினரால் நேற்று யாழ்ப்பாணம் நாகவிகாரையில் ஆரம்பமான நல்லினக்கத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பாதையாத்திரை இன்று(27) பிற்பகல் வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.