சிரியாவில் உள்ள அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆறு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டைப் பிளவுபடுத்துவதாக புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவே மைத்திரி-ரணில் அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவர முயற்சிசெய்வதாக மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யாழில் சனிக்கிழமை இடம்பெற்ற மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கை அரசியல் யாப்பு” நூலின் வெளீயீடு குழப்பங்களுடன முடிவுக்கு வந்திருந்தது. நூல் வெளியீட்டுடன் புவிசார் அரசியல் கைதிகளாய் உள்ள ஈழத் தமிழர்கள் பற்றிய ஒரு திறந்த கலந்துரையாடலும் நிகழ்வு…
எல்லையில் இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று ஐ.நா.வும், அமெரிக்காவும் வற்புறுத்தின.காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது கடந்த 18-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் 28-ந் தேதி தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான்…
இந்தியாவின் அதிரடி தாக்குதலால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதையொட்டி பாகிஸ்தான் மந்திரிசபை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. அதில் பேசிய பிரதமர் நவாஸ் ஷெரீப், “தாய்நாட்டை காப்போம்” என கூறினார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறலுக்கு பிறகு சிரியாவில் நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 96 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.கடந்த 5 ஆண்டுகளாக உளநாட்டு போர் நடக்கும் சிரியாவில் கடந்த மாதம்7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனவே, அரசு ராணுவமும் கிளர்ச்சியாளர்களும்…
பாகிஸ்தானில் புரட்சி நடத்தி அணு குண்டுகளை கைப்பற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ஹிலாரி கிளிண்டன் அச்சம் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் புரட்சி நடத்தி அணு குண்டுகளை கைப்பற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ஹிலாரி கிளிண்டன் அச்சம் தெரிவித்துள்ளார்.