பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷிய அதிபரின் சிறப்பு விமானம் மோசமான வானிலை காரணமாக கோவாவில் தரை இறங்குவதில் 9 மணி நேரம் தாமதமானது.
தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவரை நியமிப்பதில் கூட்டமைப்புக்குள் முரண்பாடு தோன்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவராக இருந்த அன்ரனி ஜெகநாதன் கடந்த முதலாம் திகதி மாரடைப்பினால் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது பதவி வெற்றிடமாகவே உள்ளது.
மேல் மாகாணத்தில் காவல்துறையினர் நடாத்திய அதிரடி சோதனையின் போது ஒரே இரவில் 1262பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
நல்லாட்சி எனச் சொல்லிக்கொள்ளம் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் குற்றவாளிகளை பாதுகாத்து வருகின்றனர். இதையேதான் முன்னர் ஆட்சிசெய்த மகிந்த ராஜபக்ஷவும் செய்தார் என சிவில் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி ஊடகவியலாளர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடினர்.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விடுதலைப்புலிகளுக்கு ஏவுகணை பெற்றுக்கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25 வருட சிறைத்தண்டனை 10 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இவர்கள் மூவரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வான்…