அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனல்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது இலங்கையின் உறவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
வடக்கை அச்சுறுத்தும் ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களே உள்ளதாகவும், அவர்களது ஆலோசனைகளுக்கு அமைவாகவே அக்குழு செயற்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அமெரிக்காவின் 45ஆவது அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள றொனால்ட் ட்ரம்புக்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாழ்த்துச்செய்திகளை அனுப்பிவைத்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவிய குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததையிட்டு சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
வடக்கில் ஒவ்வொரு புதிய விடயத்திற்கும் சர்வதேசத்தின் தலையீட்டை எதிர்பார்க்கும் ஒரு புதிய வியாதி உருவாகியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகவும், சகல தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமெனவும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வாள்வெட்டுக்கள் மற்றும் சமூக விரோத செயல்களுடன்தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவுபொலிஸாரால் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.