தென்னவள்

அரசாங்கத்தின் அனுசரணையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன!

Posted by - November 5, 2025
அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பு கோரிக்கை தொடர்பில் பொலிஸ் மதிப்பாய்வுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை

Posted by - November 5, 2025
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், முன்னர் ஆட்சியிலிருந்தவர்கள் பாதுகாப்பினை கோருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் பொலிஸாரால் பாதுகாப்பு மதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே 2026 வரவு – செலவு திட்டம் வரி அதிகரிப்பில்லை!

Posted by - November 5, 2025
அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும். முழு நாட்டையும் உள்ளடக்கிய மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய வரவு – செலவு திட்டமாகவே அது காணப்படும். இம்முறை வரவு – செலவு திட்டத்தில் வரி அதிகரிக்கப்பட…
மேலும்

சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்!

Posted by - November 5, 2025
போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…
மேலும்

தேசிய இறக்குமதி வரிக் கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 5, 2025
இலங்கை போட்டி வர்த்தகம் மற்றும் முதலீட்டு மையமாகத் தாபிப்பதற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் ஊகிக்கக்கூடிய இறக்குமதி வரி முறையின் கீழ் நடைமுறைப்படுத்துவதை இலக்காகக் கொண்ட தேசிய இறக்குமதி வரிக் கொள்கையைத் தயாரிப்பதற்காக 2024.06.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
மேலும்

யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Posted by - November 5, 2025
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று திங்கட்கிழமை (3) உயிர்மாய்த்துள்ளார்.
மேலும்

உதவி ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை

Posted by - November 4, 2025
நீதிமன்றத் தடையால் நிலுவையில் உள்ள 2,665 உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை வந்த விமானத்தில் வன்முறையில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

Posted by - November 4, 2025
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணைத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் சவுதி நாட்டவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - November 4, 2025
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் தான் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.அரசியல் கொள்கை வேறுபாட்டினால் இந்த பேரணியில் பங்கேற்க  போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது தவறானது,ஏனெனில்  அரசியல் கூட்டணியமைக்க நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை என்று…
மேலும்

சுங்க ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய அதிகாரிக்கு பதவி உயர்வும் சேவை நீட்டிப்பும் – முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்

Posted by - November 4, 2025
சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் 309 கொல்கலன்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் அதிகாரியை ஜனாதிபதி சுங்கத்தின் பணிப்பாளராக நியமித்துள்ளதுடன் தற்போது அவரது சேவை காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகும்…
மேலும்