இலங்கையில் மிகப் பெரிய இராட்சத கடல் ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காலி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் ஆமை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூர்வதால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வழமையான தொலைபேசி அழைப்புகளிற்கு மாறாக இணையத்தளத்தினூடாக மக்கள் தொடர்புகளை மேற்கொள்கின்றமையே இணையத்தளத்திற்கான வரி அதிகரித்துள்ளமைக்கான காரணம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அதிகாரத்துவ பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு வந்தது.
இலங்கை மத்திய அரசின் உள்ளுராட்சி அமைச்சு தொடர்ந்தும் தனிச்சிங்களத்தினில் வடமாகாணசபைக்கு கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் தனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து, அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள உள்ளமைக்கு அமெரிக்க செனட் சபையின் நீதித்துறைத் தலைவர் சக் க்ரேஸ்லி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனமான யுஎஸ்எய்ட் இன்று இலங்கை நாடாளுமன்றத்துடன் 1.92 பில்லியன் ரூபாய்க்கான பங்காளித்துவத்தை ஆரம்பித்தது.