அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் தான் குற்றவாளி என இனங்காணப்பட்டால் பதவி விலகுவதாக சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை அடிப்படையில் புதிய வாகனங்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நிதி அமைச்சின் செயலாளர் சமரதுங்க மூலமாக ஒப்புதல் பெற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியில் நீட்டிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திரு மாவளவன் கூறினார்.
சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு வகைகளில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
ஒன்றுபட்ட சீனா என்ற கொள்கையில் மாற்றமில்லை, சீனாவை மிரட்டுவதற்காக தைவான் விவகாரத்தை பகடைக்காயாக பயன்படுத்த மாட்டோம் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.