உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர்கள் மாகாணசபையில் உள்ளனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பல்வேறு வகையான கருத்துக்கள் வெளிவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை தலைவர் சம்பந்தன் வெளியிட வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
காலி கலந்துரையாடல்’, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படை ஆகியன இணைந்து நடத்திய ஒரு வருடாந்த அனைத்துலக கடல்சார் கருத்தரங்கு ஆகும். கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற ஏழாவது காலி கலந்துரையாடலானது ‘கடல்சார் கூட்டுப் பங்களிப்பு தொடர்பான மூலோபாயத்தை மேம்படுத்துதல்’ என்ற…
அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15ஆயிரம் ஏக்கர் நிலத்தினை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாந்தோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவால் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.