ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் தி.மு.க. போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் எனறு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிரந்தர கப்பல் சேவை அவசியமென்று ஒருபோதும் நான் தெரிவிக்கவில்லை. தென்னிந்தியாவில் நடைபெறும் திருவாதிரை நிகழ்வுக்கு ஒரு படகை ஏற்பாடு செய்து தருமாறே நான் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தேன் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
நான்காம் மாடி தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஆகையால் பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களம் (சி.ஐ.டி), கட்டாயம் மாற்றப்படவேண்டும் என்று அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
அதிகாரம்மிக்க அமைச்சர் ஒருவரை உருவாக்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கின்றது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் முக்கிய அமைச்சாக விளங்கும் புனர்வாழ்வு அமைச்சிற்கு 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் விண்கற்கள் விழுவது இயல்பு. அந்த வகையில் இந்த வருடம் இதுவரை இல்லாத அளவிற்கு விண்கற்கள் பொழிவு நிகழும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
5,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் பேருவலை பிரதேசசபை பகுதியைச் சேர்ந்த தொழிநுட்ப அதிகாரி ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
90,000 மெற்றிக் தொன் நெல்லை விலங்குகளின் உணவுக்காக விற்பனை செய்தமையால் இன்று அரிசிக்கான விலை ஆகாயமளவு உயர்வடைந்துள்ளதாக, தேசிய விடுதலை முன்னணி குற்றம்சுமத்தியுள்ளது.