அரசாங்கத்திலிருந்து விலகி தனியாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு பொறுப்பு உண்டு என்று சர்வதேச விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில் தனது பதவிக்காலத்தில் கடைசி முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா வரும் 18-ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.