தக்கலையில் 20-ந்தேதி நடைபெறும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.
தென் கொரியா அதிபரின் நெருங்கிய தோழிக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சாம்சங் நிறுவன தலைவரிடம் இன்று அரசு வழக்கறிஞர்கள் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில் தனது பதவிக்காலத்தில் இறுதி முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.