ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஆனால் ஒருநாள் கூட அவரை பார்க்க முடியவில்லை என்று முதல்வர் பன்னீர் செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.
தமது காணிகளை விடுவிக்கக்கோரி ஒன்பது நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்று நீர்கொழும்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பெருந்திரள் மக்கள் எழுச்சியின் முன்பு தில்லியோ வாசிங்கடனோ அல்லது எந்த உலக வல்லரசோ மண்டியிட்டே தீர வேண்டும் என்பது மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு உரிமைக்காக நடந்த தமிழர்தம் எழுச்சி தில்லிச் சக்கரவர்த் திகளை அடிபணியச் செய்துள்ளது. மாணவர்கள்,…
வரலாற்று கடமையை உணர்ந்து காலத்தின் தேவைகருதி ஈழமண்ணின் மட்டு நகரிலே எதிர்வரும் 10-2-2017 அன்று தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படும் ‘எழுக தமிழ்’ பேரணியிலே சிங்களதேசத்திடம் இழந்த உரிமைகளை மீட்பதற்கும் இருக்கின்ற உரிமைகள் பாதுகாப்பதற்கும் ஈழத்தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று விடுதலைச்…
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீள வழங்கு வதற்கு அரசாங்கம் முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு இன்று முற்பகல் 10.30 மணியளவில் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரனின் உருவபொம்மை எரியூட்டப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இனிவரும் காலங்களில் வடபகுதியிலுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் உருவபொம்மைகளை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.