சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருப்பாரானால் ஏன் தண்ணீர் அருந்த வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பினார்.
நேபாளத்தில் மே 14-ம் தேதி திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும், அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் பிரதமர் பிரசண்டா தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் மொசூல் நகரை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து முழுமையாக மீட்பதற்காக ஈராக் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையில், ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை நடத்தி, ஈராக் படைகளுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன.
மாநிலம் முழுவதும் தெருக்களில் பொருத்துவதற்காக, எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்குகள் கொள்முதல் செய்ய மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்ட ஒப்பந்த அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.