கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர்கள் வகித்து வரும் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான பங்குகளை போலி அட்டர்னி பத்திரம் ஒன்றின் மூலம் விற்பனை செய்ததாக, உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொறுப்புக்களைத் தட்டிக் கழித்தல் அல்லது அவற்றில் இருந்து ஒதுங்கியிருத்தல் போன்ற சுயநலச் சிந்தனைகள் தலைதூக்கியதன் விளைவே இன்று நாம் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கு அடிப்படைக் காரணங்கள் என வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான இழுபறி நிலைமை காரணமாக மீதொட்டுமுல்லை குப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் சசிகலாவை பதவியில் நீடிப்பதை அனுமதிக்க கூடாது என தேர்தல் கமிஷனிடம் தமிழக ஆம் ஆத்மி கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
நாளை முதல் ஆதார் மையங்களில் ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி 17-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.