மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது வெட்கப்பட வேண்டிய விடயம் என, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மூன்று கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த சீனப் பிரஜைகள் இருவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்யத் தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி – ஓ.பி.எஸ். அணிகள் தமிழகத்தின் கஜானாவை சுரண்டி எடுத்தது போதாது என்று மீண்டும் ஒரு முறை ஒருங்கிணைந்து ஊழல் ராஜ்யத்தை நடத்த சதித்திட்டம் போடுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார்.
மீதொட்டமுல்லை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்குமாறு கோரி, அரசாங்கத்துக்கு வலியுறுத்தும் முகமாக பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச கலாச்சார நிகழ்வில் வௌியிடப்பட்ட நூலின் ஊடாக மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளமையை தம்மால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கடான ஆசன அமைப்பாளர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்ணான்டோ, தான் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.