சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்களாக நடத்திய விசாரணை முடிவடைந்ததையடுத்து, அவர்களை மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவுவதுடன், உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிபராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளதையொட்டி தான் அதிபராக இருந்த நாட்கள் வெற்றிகரமான அமெரிக்க வரலாற்று சாதனை என பெருமை பொங்க டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி, வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டாரென, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.